திங்கள், 8 பிப்ரவரி, 2016

நான் ருத்ரா இ.பரமசிவன்.







நான் ருத்ரா இ.பரமசிவன்.

நெல்லை தாமிரபரணிக்கரையில் கல்லிடைக்குறிச்சி என் பிறந்த ஊர்.
01.06.1943 ல் பிறந்தேன்.தற்போது மதுரை "கற்பக ந‌கரில்" வசிக்கிறேன்.மதுரை எல்.ஐ.சி யில் ஆஃபீசராய் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.என் துணைவியார் பி.எஸ்.என்.எல்.லில் அதிகாரியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பிள்ளகள் இருவர். (ஆண்+பெண்) அவர்களும் பேரன் பேத்திகளும் அமெரிக்கா கலிஃபோர்னியாவில் உள்ளனர்.எனக்கு வலைப்பூவில் கவிதைகள் எழுதுவது மட்டுமே தொழில்.நான் 1969லிருந்து எழுதி வருகிறேன்.(செம்மலர் கல்கி ஜூனியர் விகடன் குங்குமம்...) 2000க்கு பிறகு வலைப்பூ எழுத்தாளன்.எனக்கு கணிதப்பாடங்கள் (டோபாலஜி காம்ப்லெக் ஸ் அனாலிசிஸ்..மற்றும் குவாண்டம் மெகானிக்ஸ் ஸ்ட்ரிங்க் தியரி கோட்பாடுகள் பற்றி படிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடிக்கும்.

வலைப்பூ மற்றும் கூகிள் குழும நண்பர்கள் (மின் தமிழ்,வல்லமை
முதலிய மின்மடல்கள்) எனக்கு பிரியமானவர்கள்.

உங்கள் பார்வையும் கருத்துகளுமே என் அன்றாட ஆகாரம்.

வணக்கம்

அன்புடன் ருத்ரா

1 கருத்து:

  1. அன்புமிக்க திரு.ருத்ரா அவர்களுக்கு,
    வணக்கம்.
    உங்களுடைய கவிதையை திரு. நா. கணேசன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். மிக்க மகிழ்ச்சி. நீங்களும் கல்லிடைக்குறிச்சி என்று அறிந்து உளம் பூரித்தேன். உங்கள் படைப்புத் திறன் மென்மேலும் செழிக்க நல்வாழ்த்துகள். நன்றி. அன்புடன், மீ.விசுவநாதன் (01.10.2017 23.08 pm)

    பதிலளிநீக்கு